என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அசாம் மழை"
- யானை குட்டி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் தத்தளிப்பதை பார்த்த ஒருவர் பாலத்தின் மேல் இருந்து கீழே பெரிய கயிற்றுடன் இறங்குகிறார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் யானை குட்டியை மீட்ட பொதுமக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஒரு ஆற்றின் நடுவே யானை குட்டி ஒன்று சிக்கியதும், அதனை வாலிபர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கயிறு கட்டி மீட்ட காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள ஒரு ஆற்றை 6 வார வயது கொண்ட குட்டி யானை ஒன்று கடக்க முயன்ற போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டிய பாலத்தை கடக்க யானை குட்டி முயன்ற நிலையில் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இதனால் யானை குட்டி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் தத்தளிப்பதை பார்த்த ஒருவர் பாலத்தின் மேல் இருந்து கீழே பெரிய கயிற்றுடன் இறங்குகிறார்.
பின்னர் வெள்ளத்தில் மெதுவாக நடந்து சென்று யானை குட்டியை நெருங்கிய அவர், அதன் இடுப்பில் கயிற்றை சுற்றிக்கட்ட முயற்சிக்கிறார். முதலில் யானை குட்டி அங்கும், இங்குமாக சென்ற நிலையில், அந்த வாலிபர் போராடி யானையின் இடுப்பு முழுவதும் கயிற்றை கட்டுகிறார். பின்னர் பாலத்தின் மேல் இருந்து பொதுமக்கள் அந்த கயிற்றை மேலே இழுக்க யானை குட்டி பத்திரமாக மீட்கப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் யானை குட்டியை மீட்ட பொதுமக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Monsoons can be rough even on our gentle giants ?
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 2, 2024
Recently, our forest officials rescued a baby elephant who lost her way along the Aie River in Chirang. She is currently being treated at Manas National Park as we try and establish contact with her mother ?#TeamAssam pic.twitter.com/lttTws8v4N
- அசாமில் காய்கறி விலை உயர மியா வியாபாரிகள்தான் காரணம் என அம்மாநில முதல்வர் விமர்சனம்
- எதற்கெடுத்தாலும் அவர்களை குறை கூறுவதா? என ஒவைசி கடும் விமர்சனம்
தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய மழைக்கு முன்பதாக அசாம் மாநிலத்தில் பேய்மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர். குடிநீர், உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில் தஞ்சமடைந்தனர்.
மழை காரணமாக காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து புலம்பெயர்ந்து அசாமில் குடியேறிய முஸ்லிம்கள் மியா என்று உள்ளூரில் மொழியில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ''காய்கறிகளை இவ்வளவு விலைக்கு உயர்த்தியது யார்? காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் மியா வியாபாரிகள். அசாம் மாநில மக்கள் காய்கறிகள் விற்பனை செய்திருந்தால், அவர்கள் விலைவாசியை உயர்த்தியிருக்க மாட்டார்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அடிக்க மியா சமூகத்தினரை வகுப்புவாத அடிப்படையில் விமர்சனம் செய்து வருகிறார். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள், அசாம் மக்களுடைய கலாசாரம், மொழியை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
ஹிமாந்தா பிஸ்மா சர்மாவின் மியா குறித்த கருத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்வினையாற்றியுள்ளார்.
அவர் பதவிட்டுள்ள டுவிட்டரில் ''அசாமில் சில குரூப்புகள் உள்ளன. அவர்களின் வீட்டு எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும், கோழி முட்டையிட வில்லை என்றாலும், மியா (முஸ்லிம்கள்) மீதுதான் குற்றம்சாட்டுவார்கள். ஒருவேளை அவர்களுடைய தனிப்பட்ட தோல்விகளால் இதுபோன்று குற்றம் சாட்டலாம்'' என்றார்.
வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கும் மோடிக்கும் இடையே நல்ல நட்புணர்வு இருக்கும் என பா.ஜனதாவினர் கூறி வரும் நிலையில், தற்போதைய நிலையில் அவர்களிடம் தக்காளி, கீரை, உருளைக்கிழக்கு உள்ளிட்டவைகள் கேட்டு நிர்வகிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் நாட்டிற்கு மோடி பயணம் செய்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 30க்கு மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
- காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காட்டு விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறை தெரிவித்துள்ளது.
கவுகாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
தொடர்மழையால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் பலியானோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது என மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்துச் செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 20 பாலங்கள், 173 சாலைகள் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
- அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
- மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கவுகாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அசாம், மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் அசாமில் இதுவரை 82 பேர் பலியாகி உள்ளனர். இதனை மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் பலியாகி உள்ளனர். தர்ராங், நாகோன், கச்சார், திப்ரூகர், ஹோஜாய், ஹைலகண்டி போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.
மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 2.31 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதுபோல தேசிய விலங்குகள் பூங்காவிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள விலங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அசாம் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை டெலிபோனில் அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் அசாமில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
- அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
- அசாம் மாநிலத்தை போல மேகாலயா மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
கவுகாத்தி:
அசாம், மேகாலயா மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக மாநிலம் முழுவதும் 2930-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஹோஜாய், நல்பாரி, பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ராஜார், சோனித்பூர் மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பகலாடியா, புத்திமாரி, ஜியா பரலி, கோபிலி, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுகிறது. பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது.
இதன் காரணமாக பயிர் நிலங்கள் சேதம் அடைந்துள்ளது. சுமார் 43 ஆயிரத்து 398 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்தும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தில் மட்டும் மழைக்கு இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தை போல மேகாலயா மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இங்குள்ள மயிஸ்னராம் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1003.6 மி.மீட்டர் மழை பெய்தது.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இவர்களை ரப்பர் படகுகள் மூலம் முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.
அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நதிகளின் கரைகள் உடைப்பெடுத்து வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஐந்தரை லட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் நேற்று மட்டும் 6 பேர் பலியாயினர். கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 4 பேரும் சச்சார் மாவட்டத்தில் 2 பேரும் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அசாமில் மழை வெள்ள பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், மணிப்பூர் மற்றும் திரிபுராவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் இறந்துள்ளனர். #AssamFloods
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்